மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா + "||" + Corona for 121 people in Tenkasi district

தென்காசி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது வாலிபர் தொற்றால் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 230 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 1,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.