மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு + "||" + chain snatching

கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மைசூரு டவுனில் நடந்து உள்ளது.
மைசூரு: கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மைசூரு டவுனில் நடந்து உள்ளது. 

தங்கச்சங்கிலி பறிப்பு 

கர்நாடகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மைசூரு டவுன் என்.ஆர்.மொகல்லா  பகுதியை சேர்ந்தவர் ரூபா(வயது 54). இவர் நேற்று காலை தனது கணவருடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். அங்கு ரூபாவும், அவரது கணவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பின்னர் 2 பேரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். 

இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ரூபாவின் கழுத்தில் கிடந்த 85 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். 

வலைவீச்சு 

ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மர்மநபர்கள் சென்ற ேமாட்டார் சைக்கிளை ரூபாவின் கணவர் சிறிது தூரம் துரத்தி கொண்டு ஓடினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

இதுகுறித்து ரூபா அளித்த புகாரின்பேரில் என்.ஆர்.மொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வீடு திரும்பிய பெண்ணிடம், பட்டப்பகலில் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.