கட்டுப்பாடுகளை மீறிய 2 டீக்கடைகளுக்கு அபராதம்
தினத்தந்தி 1 May 2021 1:44 AM IST (Updated: 1 May 2021 1:48 AM IST)
Text Sizeகட்டுப்பாடுகளை மீறிய 2 டீக்கடைகளுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஊட்டி,
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் மகேந்திரகுமார் மற்றும் ஊழியர்கள் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது 2 கடைகளில் பார்சல் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க குவளையில் டீ வழங்கியது தெரியவந்தது. இதனால் அந்த டீக்கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire