மாவட்ட செய்திகள்

அறந்தாங்கியில் அரசு பஸ்சை இயக்க முயன்றவருக்கு அடி-உதை + "||" + The government kicked anyone who tried to run the bus

அறந்தாங்கியில் அரசு பஸ்சை இயக்க முயன்றவருக்கு அடி-உதை

அறந்தாங்கியில் அரசு பஸ்சை இயக்க முயன்றவருக்கு அடி-உதை
அறந்தாங்கியில் அரசு பஸ்சை இயக்க முயன்றவருக்கு அடி-உதை விழுந்தது
அறந்தாங்கி
 அறந்தாங்கி பஸ் நிலையத்தில் நேற்று காலை 6 மணியளவில் கோட்டைபட்டினம் வழிதடத்தில் இயக்குவதற்காக அரசு டவுன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் ஏறிய ஆண் ஒருவர், அந்த பஸ்சை திடீரென இயக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் அந்த நபரை பிடித்து கீழே இறக்கினர். பின்னர் அந்த நபரை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். அதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் அறந்தாங்கி கோட்டையை சேர்ந்த சின்ராசு என்பது தெரிய வந்தது. சிறிதுநேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டு இனிமேல் இதுபோல செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அந்த நபர் பஸ்சை இயக்கி இருந்தால் பஸ் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு இருக்கும். உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.