மாவட்ட செய்திகள்

வாக்குஎண்ணும் பணியில்357 அலுவலர்கள் பணியமர்த்தப்படுவர் + "||" + The task of counting votes

வாக்குஎண்ணும் பணியில்357 அலுவலர்கள் பணியமர்த்தப்படுவர்

வாக்குஎண்ணும் பணியில்357 அலுவலர்கள் பணியமர்த்தப்படுவர்
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணியில் 357 அலுவலர்கள் பணி யமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணியில் 357 அலுவலர்கள் பணி யமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வாக்கு எண்ணிக்கை 
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குவாக்கு எண்ணும் மையமான ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது.
 7 தொகுதிகளிலும் இருந்து 2,370 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவது தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
20 முகவர்கள் 
 இந்நிலையில் முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ராஜபாளையம் தொகுதியில் 25 சுற்றுக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் தொகுதிகளில் தலா 26 சுற்றுக்களும், சிவகாசியில் 27 சுற்றுக்களும், விருதுநகர் தொகுதியில் 24 சுற்றுக்களும், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் தலா 23 சுற்றுக்களும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 இதில் ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் தலா 19 முகவர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி ஆகிய தொகுதிகளுக்கு தலா 20 முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின் போது அனுமதிக்கப்படுவர்.
அலுவலர்கள் நியமனம் 
 அலுவலர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குஎண்ணிக்கை நடைபெற உள்ளது.
அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையில் 119 கண்காணிப்பாளர்கள், 119 அலுவலர்கள் மற்றும் 119 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 357 பேர் பணியமர்த்தப்படுகின்றனர்.
 மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு வருவதற்காக 100 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதி இல்லை 
 ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை சரிபார்த்து ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடரும்.
 வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே கூட்டம் கூடுவதற்கான அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையிலும் அன்றைய தினம் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் கொண்டாட்டங்கள் நடத்தவோ அல்லது கூட்டங்கள் கூடவோஅனுமதி இல்லை. 
கண்காணிப்பு பணி 
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் சுற்று முடிவுகளை வாக்குஎண்ணிக்கை மையத்தில்உள்ள அறிவிப்புபலகையில் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது அவர்களும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கண்ணனுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.