மதுப்பிரியர்கள் கூட்டத்தால் 2 மதுக்கடைகள் மூடல்
மதுப்பிரியர்கள் கூட்டத்தால் 2 மதுக்கடைகளை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினர்.
பந்தலூர்,
தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் தாலுகாவில் உள்ள தாளூர், நம்பியார்குன்னு ஆகிய பகுதியில் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக மற்றும் கேரள மதுப்பிரியர்கள் மது வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தாளூர் மற்றும் நம்பியார்குன்னு மதுக்கடைகளில் கூட்டம் அதிகரித்தது. அங்கு மதுப்பிரியர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
எனவே அந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை அந்த 2 மதுக்கடைகளையும் மூட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினர். இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story