அரசு பஸ் ஜப்தி


அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 1 May 2021 2:03 AM IST (Updated: 1 May 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே வடக்கு கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி பொட்டக்கொல்லை கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், காயமடைந்த சதீஷ்குமாருக்கு ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு தொகை தர வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் இழப்பீடு தொகையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 753 இழப்பீடு தொகை வழங்காததால், அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்து, அரியலூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story