மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
சேத்தூர் அருேக மதுபாட்டில்களுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தளவாய்புரம்,
சேத்தூர் புறநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முனியாண்டி (வயது 37) தளவாய்புரம் டாஸ்மாக் கடையில் 42 மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் கொல்லங்கொண்டான் விளக்கில் வந்தபோது போலீசார் அவரை சோதனை செய்ததில் பிடிபட்டார்.
அதேபோல சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (48) தளவாய்புரம் டாஸ்மாக்கடையில் 40 மது பாட்டிலை வாங்கிக்கொண்டு பஸ்சில் வந்தார். இவர் சுந்தர நாச்சியார்புரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது போலீசார் இவரை பிடித்தனர்.
இவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக இந்த பாட்டில்கள் வாங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story