பெருந்துறையில் கொரோனா விதிமுறைகளை மீறிய மசாஜ் நிலையம் மூடல்


பெருந்துறையில் கொரோனா விதிமுறைகளை மீறிய மசாஜ் நிலையம் மூடல்
x
தினத்தந்தி 30 April 2021 10:34 PM GMT (Updated: 30 April 2021 10:34 PM GMT)

பெருந்துைறயில் கொரோனா விதிமுறைகளை மீறிய மசாஜ் நிலையம் மூடப்பட்டது.

பெருந்துறை
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தொற்று எளிதில் பரவும் இடங்களான மசாஜ் நிலையம் மற்றும் சலூன் கடைகள் ஆகியவற்றை திறக்க கூடாது என்று தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து இவை திறக்கப்பட்டு்ள்ளனவா என சோதனை செய்யப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
அதன்படி பெருந்துறை கோவை ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெருந்துைற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மசாஜ் நிலையம் ஒன்று இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு உத்தரவை மீறி இயங்கியதாக கூறி மசாஜ் நிலையத்தை போலீசார் மூடி அதன் சாவியை பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.  மேலும் மசாஜ் நிலைய உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story