மாவட்ட செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் + "||" + lbp cannel

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்காக கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை மொத்தம் 5 சுற்றுகளாக 12 டி.எம்.சி தண்ணீர் திறக்க முடிவெடுக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நேற்றுடன் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் காலம் முடிவடைந்ததால் நேற்று காலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் திறப்பு காலங்களில் மழை பெய்ததால் 2-ம் போகத்துக்கு மொத்தம் 10.43 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 88.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 219 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடங்கியது
சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
2. விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போர்: கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க நபார்டு வங்கி நிதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை- ஒருங்கிணைந்த தீர்வு எட்டப்படுமா?
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போரின் உச்சகட்டமாக நபார்டு வங்கி இந்த திட்டத்துக்கு நிதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
3. ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலை பராமரிக்க ரூ.709 கோடியில் அறிவிக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை