மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் + "||" + Kapusura drinking water for cleaning staff

தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர்

தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர்
தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்க நண்பர்கள் சார்பாக மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கபசுர குடிநீர், கையுறை வழங்கும் நிகழ்ச்சி செல்லப்பாண்டியன் நகரில் நடந்தது.

இயக்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ரத்தினவேல் முன்னிலை வகித்தார். தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கையுறை, கபசுர குடிநீர் ஆகியவற்றை அகில இந்திய பார்வர்டு கட்சி மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் முருகேசன் வழங்கினார். 

இதேபோல் தட்டார்மடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வேலாயுதம், பொருளாளர் சந்தன கலைச்செல்வன், செல்லத்துரை, அந்தோணி பாஸ்கர், தர்மராஜ், ஜோசப், ஜெபஸ்டின், துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் நாடார் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில் பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
போடியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நெல்லையில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி; தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
நெல்லையில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை டிராபிக் ராமசாமி தடுத்து நிறுத்தினார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை