மாவட்ட செய்திகள்

பெயிண்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது + "||" + Attack on painter; youth arrested

பெயிண்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

பெயிண்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
பெயிண்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த பிள்ளையார்நத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று தெற்கு காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவர், மாரிச்சாமி மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதை மாரிச்சாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மாரிச்சாமியை, மனோஜ்குமார் அவதூறாக பேசி கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாரிச்சாமி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மாரிச்சாமி அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனோஜ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
3. குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்