ஆண்டிப்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
ஆண்டிப்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
ஆண்டிப்பட்டி:
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையும், தேசிய குழந்தைகள் நல திட்ட அமைப்பும் இணைந்து ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், கிருமி நாசினி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் கலந்துகொண்டு, பொதுமக்கள் கொரோனா பேரிடர் காலத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும், முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது, தனிமனித இடைவெளி குறித்து விளக்கி பேசினார்.
இதில் தேசிய குழந்தைகள் நல திட்ட மருத்துவ அலுவலர் ரஞ்சித்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கிருமிநாசினி மற்றும் முக கவசங்களை வழங்கினர்.
Related Tags :
Next Story