ஆரணி; முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை


ஆரணி; முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 May 2021 1:17 PM GMT (Updated: 1 May 2021 1:17 PM GMT)

ஆரணியில் இன்று பட்டப்பகலில் முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை ெசய்யப்பட்டார்.

ஆரணி

ஆரணியில் இன்று பட்டப்பகலில் முன்விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பியோடும் போது, அந்த வழியாக எதிரே நடந்து வந்த மற்றொரு நபரையும் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டது.

முன்விரோதம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ஜி.ஆனந்தன், காய்கறி வியாபாரி. இவருடைய மகன் யோகேஷ் (வயது 21). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், அஜித், சூர்யா, கோபி ஆகியோருக்கும் இடைேய ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி அப்பகுதியைச் சேர்ந்த யுவராஜின் தாயார் இறந்து விட்டார். அப்போது யோகேஷ் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அந்தத் தகராறால் கடும் கோபத்தில் இருந்து வந்த எதிர் தரப்பினர் யோகேசை கொலை செய்வதற்காகத் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் யோகேஷ் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, 7 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கத்தியால் கழுத்திலும், தலையிலும் சரமாரியாக வெட்டி விட்டு வி.ஏ.கே. நகர் வழியாக தப்பியோடினர்.

வெட்டுக்காயத்துடன் கீழே சரிந்த யோகேஷ் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நண்பருக்கும் அரிவாள் வெட்டு

அந்த நேரத்தில் அந்த வழியாக எதிரே வந்த யோேகசின் நண்பரும், மலையாம்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தவருமான கும்கி என்ற விஜயகுமார் (22) என்பவரையும் கும்பல் தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

படுகாயம் அடைந்த கும்கி என்ற விஜயகுமார் ரத்த காயத்துடன் கிராமத்துக்குள் ஓடி வரவே, வீட்டுக்கு அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்த யோகேசின் உடலை பார்த்து கூச்சலிட்டார். 

அவரின் கூச்சல் சத்தத்தைக் ேகட்டதும் யோேகசின் தாயார், சகோதரிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த யோேகசின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை

அவர்கள் இதுபற்றி ஆரணி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

இதையடுத்து கொலை செய்யப்பட்ட யோேகசின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த கும்கி என்ற விஜயகுமாரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யோகேஷ் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

கும்பலுக்கு வலைவீச்சு

ஆரணி டவுன் போலீசில் யோகேசின் தந்தை ஆனந்தன் புகார் செய்தார். அதில், எனது மகன் சாவுக்கு பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு தேடப்பட்டு வரும் சங்கர், அஜித், சூர்யா, கோபி ஆகியோர் மீதும், காஞ்சீபுரம் கூலிப்படையைச் சேர்ந்த கும்பலை சேர்ந்தவர்களும் தான் காரணம் ஆகும். 

அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் ெதரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேைச கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர். 
ஆரணியில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story