வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு
வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கந்தர்வகோட்டை, மே.2-
கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் ஸ்டாலின் (வயது 23). சம்பவத்தன்று மலையப்பன் ஆடுகளை அதே ஊரை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் தரிசு நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி மலையப்பனை திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மலையப்பனின் மகன் ஸ்டாலின் வெள்ளைச்சாமியின் வீட்டிற்குச் சென்று தந்தையை திட்டியது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் ஸ்டாலினை தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மலையப்பன் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வெள்ளைச்சாமி தரப்பில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளைச்சாமி மற்றும் பாண்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story