முககவசம் அணியாத 60 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 60 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 May 2021 11:21 PM IST (Updated: 1 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் முககவசம் அணியாத 60 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

 திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா ஒழிப்பு பணியில் கண்காணிப்பு அலுவலராக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான அஞ்சலக வீதி,பெரியகடைவீதி, மதுரை ரோடு, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் மற்றும் மோட்டார் சைக்கிள், கார், பஸ்களில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 60 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, முதல்நிலை ஏட்டு சுப்பையா கண்டவராயன்பட்டி ஊராட்சி செயலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story