மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் விவசாயி கைது + "||" + Near Ulundurpet Farmer arrested in teen murder case

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் விவசாயி கைது

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் விவசாயி கைது
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்


இளம்பெண்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியை சேர்ந்த பழனியாபிள்ளை. இவருக்கு மலர் என்கிற மனைவியும், பிரேமா(வயது 26), பிரபாகரன்(19) என்ற மகனும் உள்ளனர். பழனியாபிள்ளை உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் பிரேமாவும், கள்ளக்குறிச்சி அம்மையகரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த மலர் தனது மகளை கண்டித்ததோடு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறினார். இதில் மனம் மாறிய பிரேமா தனது தாய் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம செய்துகொள்ளவும் முடிவு செய்தார். இதனால் தனது காதலனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
இதை அறிந்து கொண்ட லாரி டிரைவர் தன்னை காதலிக்கும்படி பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இதற்கிடையே சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள புதரில் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் பிரேமா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
பிரேமாவை கொலை செய்த நபர் யார் என்பது மர்மமாக இருந்தது. இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். 

3 தனிப்படை

கொலையாளியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 
போலீசாரின் பார்வை பிரேமாவின் காதலன் லாரி டிரைவர் மீது விழுந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவருக்கும் இந்த கொலைக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது. 

கைது

இதையடுத்து கொலை நடந்த இடத்தில் உள்ள செல்போன் டவர் மூலம் கொலையாளியை பற்றி போலீசார் துப்பு துலக்கினர். இதில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரேமாவின் வீட்டின் பின்புறம் ஒரு பகுதியில் வாடகைக்கு வசித்து அவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர்செய்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி(47) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று பிரேமாவை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுத்ததால் அவரை கட்டையால் அடித்து கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கலியூமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. விவசாயி கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய விவசாயி கைது செய்யப்பட்டார்.