மாவட்ட செய்திகள்

குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி பழுதாகும் மின்சாதன பொருட்கள் + "||" + Electrical products

குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி பழுதாகும் மின்சாதன பொருட்கள்

குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி பழுதாகும் மின்சாதன பொருட்கள்
குறைந்த அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது அடைந்து வருகிறது.
திருவரங்குளம்,மே.2-
திருவரங்குளம் கடைவீதி, டி.வி.எஸ்.நகர், கோவில் வீதி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருந்து வந்தது. இதனால் வீடுகளில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பிரிஜ் உள்ளிட்டவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சில நேரங்களில் டியூப் எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மின்மோட்டாரை இயக்க முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

அதேநேரத்தில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது அடைந்து வருகிறது. எனவே சீரான மின்சாரம் வினியோகிக்க இப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சார குறைபாட்டை உடனடியாக சரி செய்யவில்லையென்றால்  விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன
வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன