திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை


திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 1 May 2021 11:47 PM IST (Updated: 1 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

திருவாரூர்;
2 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. 
மதுக்கடைகள் மூடல்
திருவாரூர் மாவட்டத்தில் 108 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆனால் தற்போது மதுக்கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் முதல் நாளில் விற்பனை அதிகரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று மே தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி தொடர்ந்து 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 
ரூ.5½ கோடி
இதனால் மதுப்பிரியர்கள் முன்எச்சரிக்கையுடன் மது பாட்டில்களை வாங்கிட திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகரித்தது. நேற்று முன்தினம்  ஒரே நாளில் ரூ.5 கோடியே 52 லட்சம் மதிப்பில் மது விற்பனை நடைபெற்றது. சராசரியாக நடைபெறும் மது விற்பனை விட கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story