மாவட்ட செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை + "||" + Suicide

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள தேவர்மலை கிராமம் சீத்தபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). விவசாயி. இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருணை மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
பாளையங்கோட்டையில் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. சிறுவன் தற்கொலை
கரூரில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்
4. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை
கணவரிடம் அவதூறாக கூறிய 2 வாலிபர்களே என் சாவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்ெகாலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
5. நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.