மாவட்ட செய்திகள்

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம் + "||" + Blood donation

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம்

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம்
நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தினர் ரத்ததானம் செய்தனர்.
ஆலங்குடி,மே.2-
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நடிகர் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அருள் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி ரத்த சேமிப்பு டாக்டர் ராதாகிருஷ்ணன் ரத்தம் சேமிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அஜித் ரசிகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் உள்பட 20 பேர் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது குறித்து டாக்டர் பெரியசாமி கூறும்போது, கொரோனா தொற்று உள்ள இந்த காலகட்டத்தில் குருதி கொடையாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் இல்லாவிட்டால் விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பிரசவ காலத்தில் ரத்தம் தேவைப்படுவோர் உயிர்காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஆகவே தகுதியான நபர்கள் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6 மாத காலத்திற்கு ரத்தம் கொடுக்க முடியாது. ரத்ததானம் செய்ய விரும்புவோர் தடுப்பூசி போடுவதற்கு முன் ரத்ததானம் செய்ய வேண்டும் என்றார்.