மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 1 May 2021 7:40 PM GMT (Updated: 1 May 2021 7:40 PM GMT)

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அம்பை, மே:
கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

கார் சாகுபடி

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனத்திற்காக ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணையின் நீர்மட்டம் 89.43 அடியாக உள்ளது அணைக்கு நீர்வரத்து 7 கனஅடி நீர் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 250 கன அடி நீரும், பெருங்கால் மதகு மூலம் 45 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தண்ணீர் திறப்பு

அதன்பேரில் தமிழக முதன்மை செயலாளர் உத்தரவுக்கிணங்க நேற்று மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை தொடர்ந்து 105 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 2756.62 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனத்தின் வழியாக பயன்பெறும்.
அணை திறப்பு நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநில கோட்டபொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற் பொறியாளர் தங்கராஜன், உதவி என்ஜினீயர்கள் மகேஸ் வரன், சிவகணேஷ் குமார், பெருங்கால் பாசன விவசாய சங்க தலைவர் பாபநாசம், பாசன குடிமராமத்து தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் சீதாராமன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story