மாவட்ட செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரம் + "||" + sugar cane cultivation

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரம்

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரம்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி:-

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தைப்பொங்கல்

தைப்பொங்கல் நாளில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் கரும்பு. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் கரும்பு விளைவிக்கப்பட்டாலும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு.
வளமான மண், காவிரி தண்ணீர், பாரம்பரியமான விவசாய முறைகளை கைவிடாத விவசாயிகள் உள்ளிட்ட காரணங்களால் தான் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிர் செய்யப்படும் பொங்கல் கரும்புக்கு தமிழ்நாடு முழுவதும் கிராக்கி உள்ளது. 

சித்திரைப்பட்டம்

பொங்கல் கரும்பு பயிரிட சித்திரைப்பட்டம் உகந்தது என கருதப்படுகிறது. அதன்படி தற்போது திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இதற்கான விதைக் கரும்புகரணைகள் பாரம்பரிய விவசாயிகளிடம் இருந்து பெற்று, வயல்களை உழுது பண்படுத்தி பார் பிடித்து அதில் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான வெயிலிலும் விதைக் கரணைகளை நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று இருந்தது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு அந்த பரப்பளவுக்கு குறையாமல் பொங்கல் கரும்பு பயிர் செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.