சேலம் அருகே ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


சேலம் அருகே ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 8:05 PM GMT (Updated: 1 May 2021 8:05 PM GMT)

சேலம் அருகே ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்:
சேலம் அருகே ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 1,700 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மாம்பழங்கள் பறிமுதல்
சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, சிவலிங்கம், புஷ்பராஜ் ஆகியோர் நேற்று அங்கு சென்றனர்.
பின்னர் புகாரின் பேரில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 1,700 கிலோ மாம்பழங்கள், 3 லிட்டர் எத்திப்பான் மற்றும் 4 லிட்டர் கரைக்கப்பட்ட எத்திப்பான் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அழிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதையடுத்து அந்த மாம்பழங்களை செட்டிச்சாவடியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டி அழித்தனர்.
மேலும் வெங்கடேசன் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story