இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டிருந்தன


இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டிருந்தன
x
தினத்தந்தி 1 May 2021 8:19 PM GMT (Updated: 1 May 2021 8:19 PM GMT)

ஜெயங்கொண்டம் பகுதியில் இறைச்சி, மீன் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகளும், சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாட்டு இறைச்சிக் கடைகளும் உள்ளன. மேலும் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலையில் மீன் மார்க்கெட்டுகளும் உள்ளன. தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், தினமும் இரவு நேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறைச்சிக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சனிக்கிழமைகளிலும் அந்த கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மீன் கடைகள் இல்லாததால், மீன் மார்க்கெட்டுகளும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதையறியாமல் மீன், இறைச்சி வாங்குவதற்காக அந்த கடைகளுக்கு வந்த ஏராளமானவர்கள், கடைகள் மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில மீன் கடைக்காரர்கள், கடைகளை திறந்து வைத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று அவர் களுக்கு அறிவுரை கூறி, கடைகளை மூடச்செய்தனர்.

Next Story