மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Suicide by hanging

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:

திருமணம் செய்து வைக்க...
அரியலூர் மாவட்டம் இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு 3 மகன்கள். இதில் 3-வது மகன் செல்வகுமார்(வயது 21). இவரது அண்ணன்கள் 2 பேருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்வக்குமார், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் தாமதமானதாக ெதரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தொங்கினார்.
சாவு
இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செல்வகுமார், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. போலீஸ் ஏட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவிக்கு போன் செய்து விட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார்
4. விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை
விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்