விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் சம்பங்கி பூக்களை ரோட்டில் கொட்டிய விவசாயிகள்


விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் சம்பங்கி பூக்களை ரோட்டில் கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 2 May 2021 3:12 AM IST (Updated: 2 May 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் சம்பங்கி பூக்களை விவசாயிகள் ரோட்டில் கொட்டினார்கள்.

பவானிசாகர்
விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் சம்பங்கி பூக்களை விவசாயிகள் ரோட்டில் கொட்டினார்கள். 
சம்பங்கி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகரை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பங்கிப்பூ பயிரிட்டுள்ளனர். நாள்தோறும் இப்பகுதியில் சுமார் 5 முதல் 7 டன் சம்பங்கி பூக்கள் விளைகின்றது. இங்கு விளையும் பூக்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும், இது தவிர கர்நாடகா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கின்றனர். இதேபோல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் சம்பங்கிப்பூ விற்பனை செய்யப்படுகிறது.
ரோட்டில் கொட்டினார்கள்...
இந்தநிலையில் சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் ஒரு கிலோ சம்பங்கிப்பூ ரூ.140 வரை விற்பனையானது. பின்னர் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. 
நேற்று சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் சம்பங்கிப்பூ ஒரு கிலோ 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையே விற்பனையானது.
இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் சிலர் நஷ்டத்துக்கு பூ விற்பதா? என்று பல்வேறு இடங்களில் ரோட்டிலேயே பூக்களை கொட்டிவிட்டு சென்றார்கள். 

Next Story