கொடுமுடி, சிவகிரியில், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.1½ கோடிக்கு விவசாய விைளபொருட்கள் ஏலம்


கொடுமுடி, சிவகிரியில், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.1½ கோடிக்கு விவசாய விைளபொருட்கள் ஏலம்
x

கொடுமுடி, சிவகிரி, அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.1½ கோடிக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

ஈரோடு
கொடுமுடி, சிவகிரி, அந்தியூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.1½ கோடிக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது. 
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இயங்கிவரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் மொத்தம் 8 ஆயிரத்து 508 தேங்காய்களை கொண்டுவந்திருந்தனர். 
இது ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 33 ரூபாய் 65 காசுக்கும், அதிக பட்ச விலையாக ஒரு கிலோ 36 ரூபாய் 20 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 133 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய் 486 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 117 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்சமாக 123 ரூபாய் 70 காசுக்கும் ஏலம் போனது. 
இதேபோல் 2-ம் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 95 ரூபாய் 39 காசுக்கும், அதிக பட்ச விலையாக  120 ரூபாய் 25 காசுக்கும் ஏலம்போனது. கொப்பரை தேங்காய் மொத்தம் 27 லட்சத்து 20 ஆயிரத்து 62 ரூபாய்க்கு விற்பனையானது.
எள்
218 மூட்டைகளில் எள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இது குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ 85 ரூபாய் 79 காசுக்கும், அதிகபட்ச விலையாக ஒரு கிலோ 108 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரத்து 106 ரூபாய்க்கு எள் ஏலம் போனது.
நிலக்கடலை 176 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (கிலோ) 64 ரூபாய் 49 காசு முதல் 68 ரூபாய் 39 காசு வரை என மொத்தம் ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 737-க்கு விற்பனையானது.
விவசாய விளைெபாருட்கள் மொத்தம் 48 லட்சத்து 42 ஆயிரத்து 38 ரூபாய்க்கு விற்பனையானது.
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை (காய்ந்தது) ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 300 மூட்டைகளில் 9 ஆயிரத்து 946 கிலோ எடையுள்ள நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இது (கிலோ) நிலக்கடலை 56 ரூபாய் 72 காசு முதல் 68 ரூபாய் 6 காசு வரை என மொத்தம் ரூ.6 லட்சத்து 27 ஆயிரத்து 254 விற்பனை ஆனது. 
இதேபோல் 1,197 மூட்டைகளில் 89 ஆயிரத்து 495 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ 82 ரூபாய் 73 காசுக்கும், அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 102 ரூபாய் 16 காசுக்கும் ஏலம் போனது.
சிவப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ 82 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 109 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 101 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது.
வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 102 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் விடப்பட்டது.
மொத்தமாக 88 லட்சத்து 31 ஆயிரத்து 599 ரூபாய்க்கு எள் விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், ஒலகடம், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 71 மூட்டைகளில் நிலக்கடலை (காய்ந்தது) விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இது (குவிண்டால்) ஒன்று ரூ.5 ஆயிரத்து 769 முதல் ரூ.6 ஆயிரத்து 700 வரை என மொத்தம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 375-க்கு விற்பனை செய்யப்பட்டன. 
ஈரோடு, தர்மபுரி, மேட்டூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நிலக்கடலையை ஏலம் எடுத்துச் சென்றனர். 
கொடுமுடி, சிவகிரி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் 1 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 266 ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்போனது.

Next Story