மணலியில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சலூன் கடைக்கு ‘சீல்’
மணலியில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சலூன் கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணலி உதவி வருவாய் அலுவலர்கள் திருபால், பாஸ்கர் ஆகியோர் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் சின்னமாத்தூர் சாலையில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த சலூன் கடையை மூடி ‘சீல்’ வைத்தனர்.
மேலும் வார்டு 19-ல் தனியார் திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை காட்டிலும் அதிகமானோர் பங்கேற்று, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாதது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் திருமணம் நடைபெற்றதால் அந்த திருமண மண்டபத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story