இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது
இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை மணலியை சேர்ந்தவர் கவுதம்மோனிஷ் (வயது 28). வடமாநிலத்தை சேர்ந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணலியில் தனியாக தங்கி, மணலி சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.
இவர், அதே பகுதியில் உள்ள திருமணமான 23 வயது இளம்பெண் தனது வீட்டின் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்ததை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம்மோனிசை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story