கூடுவாஞ்சேரி அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கூடுவாஞ்சேரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நங்கூரம் நகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 22), இதே பகுதியை சேர்ந்தவர் அப்பளம் தினேஷ். நண்பர்கள். இந்த நிலையில் ரகுமான் என்பவருக்கும் அப்பளம் தினேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
அப்பளம் தினேஷ் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பளம் தினேஷின் நண்பரான பூமிநாதனை நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அருகே பெருமாட்டுநல்லூர் ஏரி அருகே வழிமறித்த ரகுமான் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பூமிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூமிநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story