ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வந்தன. அதன்படி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜீவ ரேகா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரிமளா நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று அவரது முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன.
Related Tags :
Next Story