கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சி. சம்பத் தோல்வி


கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.சி. சம்பத் தோல்வி
x
தினத்தந்தி 2 May 2021 9:47 PM GMT (Updated: 2 May 2021 9:47 PM GMT)

அய்யப்பன் வெற்றி

கடலூர், 
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.சி.சம்பத், தி.மு.க. சார்பில் கோ.அய்யப்பன், அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் ஞானபண்டிதன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்தராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜலதீபன் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. 
இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் 84,563 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகள் பெற்றார். 
இதன்மூலம் 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன் சான்றிதழ் வழங்கினார். 
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,39,372
பதிவான வாக்குகள்- 1,82,392
வாக்கு சதவீதம் -  74.77
தபால் ஓட்டுகள்
மொத்தம் - 3703
தி.மு.க. -1750
அ.தி.மு.க. - 1408
நோட்டா - 8
செல்லாதவை -391
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் 
அய்யப்பன்(தி.மு.க.) - 84,563
எம்.சி.சம்பத் (அ.தி.மு.க.) - 79,412
ஞானபண்டிதன் (தே.மு.தி.க.) -1,499
ஆனந்தராஜ் (மக்கள் நீதிமய்யம்) - 4,040
ஜலதீபன்(நாம்தமிழர் கட்சி) -9,563
நோட்டா -1,236

Next Story