மாவட்ட செய்திகள்

நெய்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2-வது முறையாக வெற்றி + "||" + DMK Candidate Saba Rajendran won for the 2nd time

நெய்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2-வது முறையாக வெற்றி

நெய்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் 2-வது முறையாக வெற்றி
வெற்றி
பண்ருட்டி, 
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஜெகன், தி.மு.க. சார்பில் சபா.ராஜேந்திரன், அ.ம.மு.க. சார்பில் பக்தரட்சகன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 

இதில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், 75,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் சபா.ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கினார். 
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,18,603
பதிவான வாக்குகள்-1,62,311
வாக்கு சதவீகிதம் -74.25