புவனகிரியில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வெற்றி


புவனகிரியில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 9:59 PM GMT (Updated: 2 May 2021 9:59 PM GMT)

அருண்மொழிதேவன் வெற்றி

கடலூர், 
புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அருண்மொழிதேவன், தி.மு.க. வில் துரை.கி.சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கே.எஸ்.கே. பாலமுருகன், மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. சார்பில் ரேவதி, நாம்தமிழர் கட்சி ரத்தினவேல் மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் என்று 9 பேர் என மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சி.முட்லூர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 இதில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழி தேவன் 96453(தபால் ஓட்டுக்கள் சேர்த்து) வாக்குகள் பெற்று பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் தி.மு.க. வேட்பாளர் துரை.கி.சரவணனை விட 8259 வாக்குகள் கூடுதலா கபெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் அருண்மொழிதேவனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார் சான்றிதழ் வழங்கினார். 
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்                  -248517
பதிவான வாக்குகுள்               - 197418
வாக்கு சதவீதம்                     -78.57
செல்லாதவை -253
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் 
அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.) - 96453
துரை.கி.சரவணன் (தி.மு.க.) - 88194
கே.எஸ்.கே. பாலமுருகன் (அ.ம.மு.க.) -2470
ரேவதி (ஐ.ஜே.கே.) - 315
ரத்தினவேல் (நாம்தமிழர் கட்சி) -6958
நோட்டா - 1058

Next Story