மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி + "||" + DMK in Palayankottai constituency Candidate Abdul Wahab wins

பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி

பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி பெற்றார்.
நெல்லை, மே:
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 357 வாக்குகள் பதிவாகின. 
பாளையங்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜெரால்டு, தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் உள்பட 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதற்காக அங்கு ஏராளமான மேைஜகள் போடப்பட்டு இருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப்புக்கு 2,248 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெரால்டுக்கு 583 வாக்குகளும் கிடைத்தன.

அப்துல் வகாப் வெற்றி

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஒவ்வொரு சுற்றிலும் இரு வேட்பாளர்களும் கணிசமான வாக்குகள் பெற்றனர். பின்னர் தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் தொடர்ந்து முன்னிலை பெற்ற வண்ணம் இருந்தார். முடிவில், அப்துல் வகாப் 89,117 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெரால்டு 36,976 வாக்குகளும் பெற்றனர். அதாவது 52 ஆயிரத்து 141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் அமோக வெற்றி பெற்றார். 
பாளையங்கோட்டை தொகுதியில் கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியை அந்த கட்சி மீண்டும் தக்க வைத்துக்கொண்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி
ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றார்.
2. உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.