மாவட்ட செய்திகள்

முதியவர் மயங்கி விழுந்து சாவு + "||" + The old man fainted and died

முதியவர் மயங்கி விழுந்து சாவு

முதியவர் மயங்கி விழுந்து சாவு
நெல்லையில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
நெல்லை, மே:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் பரமசிவன் (வயது 82) என்பதும், பாளையங்கோட்டை மெய்பொருள் நாயனார் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அந்த முகவரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.