மாவட்ட செய்திகள்

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி + "||" + DMK in Radhapuram constituency Candidate Dad wins

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி
ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றார்.
நெல்லை, மே:
ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றார். 

ராதாபுரம் தொகுதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் முக்கிய தொகுதியாக ராதாபுரம் விளங்குகிறது. இந்த தொகுதியில் மட்டும் தான் அதிகப்பட்சமாக 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தி.மு.க. சார்பில் அப்பாவு உள்ளிட்டோர் களம் கண்டனர்.
ராதாபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 525 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 407 வாக்குகள் பதிவாகின. 

தி.மு.க. வெற்றி

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுைர முன்னிலை வகித்தார். அதன்பிறகு 2-வது சுற்றில் மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. வேட்பாளர் அப்பாவு முன்னிலை வகித்தார். அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்ற அவர் இறுதியில் 82 ஆயிரத்து 331 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இன்பதுரைக்கு 76 ஆயிரத்து 406 வாக்குகள் கிடைத்தன. 
ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களும், அவர்கள் வாங்கிய வாக்குகளும் வருமாறு:-
1. அப்பாவு (தி.மு.க.) - 82,331
2. இன்பதுரை (அ.தி.மு.க.) - 76,406
3. ஏசுதாசன் (நாம் தமிழர் கட்சி) - 19,371 
4. ஜெயபாலன் (ேத.மு.தி.க.) - 2,432
5. தேவபிரான் (சுயே.) - 1,224
6. சுப்புராஜ் (சுயே.) - 518
7. சுடலைமணி (சுயே.) - 470
8. இசக்கியம்மாள் (பகுஜன் சமாஜ் கட்சி) - 464
9. சேர்மத்துரை (சுயே.) - 456
10. ஜேசு ராஜேந்திரன் (நாம் இந்தியர் கட்சி) - 329
11. குமார் (சுயே.) - 318
12. முத்துச்செல்வி (சுயே.) - 310
13. சந்திரன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி) - 295
14. பேராயர் காட்ப்பிரே வாஷிங்டன் நோபுள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) - 235
15. வீனஸ் வீரஅரசு (சுயே.) - 224
16. கண்ணன் (சுயே.) - 193
17. விஜயகுமார் (சுயே.) - 143
18. அருண்ராஜ் (சுேய.) - 139
19. சாஸ்வதன் (சுயே.) - 117
20. அந்தோணி ேராசாரி (சுயே.) - 98
21. ஷேக் செய்யது அலி (சுயே.) - 95
22. அபினந்த்ராம் (சுயே.) - 69
23. ரெத்தினபாண்டி (சுயே.) - 59
24. கட்டேரி பெருமாள் (சுயே.) - 59
25. மணிகண்டன் (சுயே.) - 52
26. நோட்டா - 903
ராதாபுரம் தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். தற்போது அவர் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி பெற்றார்.
2. உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.