நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது


நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது
x
தினத்தந்தி 2 May 2021 10:51 PM GMT (Updated: 2 May 2021 10:51 PM GMT)

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

நெல்லை, மே:
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 75 ஆயிரத்து 902 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

நாங்குநேரி தொகுதி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 68.60 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதாவது தொகுதியில் உள்ள 2 லட்சத்து 77 ஆயிரத்து 578 வாக்காளர்களில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 137 பேர் வாக்களித்தனர். இங்கு அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் பலத்த போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முதல் 3 சுற்றுகளில் அ.தி.மு.க வேட்பாளர் தச்சை கணேசராஜா முன்னிலை வகித்தார். 4-வது சுற்றில் நிலைமை மாறியது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை வகித்தார். அதன்பிறகு தொடர்ந்து முன்னிலை வகித்த அவர் இறுதியில் 75 ஆயிரத்து 902 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் தச்சை கணேசராஜாவுக்கு 59 ஆயிரத்து 416 வாக்குகள் கிடைத்தன.

வாக்கு விவரம்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. ரூபி மனோகரன் (காங்கிரஸ்) - 75,902
2. தச்சை கணேசராஜா (அ.தி.மு.க.) - 59,416
3. பரமசிவ அய்யப்பன் (அ.ம.மு.க.) - 31,870
4. வீரப்பாண்டி (நாம் தமிழர் கட்சி) - 17,654
5. கதிரவன் (மக்கள் தேசம் கட்சி) - 1,154
6. ஞானபாலாஜி (சுயே.) - 813
7. சுப்புலட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி) - 700
8. அசோக்குமார் (புதிய தமிழகம் கட்சி) -  625
9. கந்தன் (அனைத்துலக தமிழர்கள் முன்னேற்ற கழகம்) - 497
10. லெனின் (சுயே.) - 454
11. சண்முகசுந்தரம் (நாம் இந்தியர் பார்ட்டி) - 441
12. முத்துராஜ் (சுயே.) - 436
13. கந்தசாமி (சுயே.) - 432
14. பிரபாகரன் (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி) - 430
15. முத்து துரை (சுயே.) - 161
16. நோட்டா - 1,537

Next Story