சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. வெற்றி


சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 10:59 PM GMT (Updated: 2 May 2021 10:59 PM GMT)

சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது.

தென்காசி, மே:
சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி தோல்வி அடைந்தார். அவர் தி.மு.க. வேட்பாளர் ராஜாவிடம் 5,354 வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்தார்.

அமைச்சர் ராஜலட்சுமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ெமாத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 310 பேர் ஆவர். இதில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 123 பேர் வாக்களித்தனர். இது 71.48 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தி.மு.க. சார்பில் ஈ.ராஜா, அ.ம.மு.க. சார்பில் ஆர்.அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கே.பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் பி.மகேந்திரகுமாரி உள்பட 15 பேர் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க. தோல்வி

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் தென்காசி கொடிக்குறிச்சி யூ.பி.எஸ். கல்லூரியில் நேற்று எண்ணப்பபட்டன. அங்கு ஏராளமான மேஜைகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேட்பாளர்களின் முன்னிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் ேபாட்டி நிலவியது. இருகட்சி வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
முடிவில் தி.மு.க. வேட்பாளர் ஈ.ராஜா 71 ஆயிரத்து 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் வி.எம்.ராஜலட்சுமி 65 ஆயிரத்து 830 வாக்குகள் பெற்றார். 5,354 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜலட்சுமி தோல்வி அடைந்தார்.

Next Story