மாவட்ட செய்திகள்

மண் அள்ளிய 2 பேர் கைது + "||" + 2 arrested for dumping soil

மண் அள்ளிய 2 பேர் கைது

மண் அள்ளிய 2 பேர் கைது
சிவகிரி அருகே மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி, மே:
சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமத்திற்கு கிழக்கே உள்ள இடத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருப்பதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சேகனா தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பொக்ைலன் எந்திர டிரைவர் கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த கலியன் மகன் ராமராஜ் வயது (30), டிப்பர் லாரி டிரைவர் கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சார்ந்த சாமி மகன் தங்கராஜ் (30) என்பதும், சட்ட விரோதமாக மண் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மண் அள்ளுவதற்கு பயண்படுத்திய பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பேர் கைது
மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
2. நெல்லை அருகே கடையை சேதப்படுத்திய 2 பேர் கைது
நெல்லை அருகே கடையை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
4. காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது
நாட்டுவெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைதானார்கள். 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
5. பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது
குளச்சலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14½ பவுன் நகைகள், ரூ.77 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.