மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி + "||" + AIADMK in Alangulam constituency Candidate Manoj Pandian wins

ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி

ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி
ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றார்.
ஆலங்குளம், மே:
ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றார். அவர் தி.மு.க. வேட்பாளர் பூங்கோதையை விட 3,539 வாக்குகள் கூடுதலாக பெற்றார். 

ஆலங்குளம் தொகுதி

பீடித்தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த ஆலங்குளம் தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 429 வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் 2 லட்சத்து 1,578 வாக்குகள் பதிவானது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன், தி.மு.க. சார்பில் பூங்கோதை உள்பட 10 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே நேரடி போட்டி என்றாலும், சுயேச்சை வேட்பாளரான ஹரிநாடார் இருகட்சிக்கும் சமபலமாக திகழ்ந்தார். 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அவர்கள் கணிசமான வாக்குகள் பெற்று வந்தனர். இறுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் 74 ஆயிரத்து 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை 70 ஆயிரத்து 614 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையும், சுயேச்சை வேட்பாளரான பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் 37 ஆயிரத்து 727 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த தொகுதியில் கடந்த முறை தி.மு.க. சார்பில் பூங்கோதை போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். தற்போது அவர் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார்..