மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் + "||" + Kapusura drinking water for the public

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
தென்காசி அருகே அய்யாபுரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தென்காசி, மே:
தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தில் தேவி ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போன்று இந்த ஆண்டு வருகிற 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்த விழா நடத்தப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் அந்த கோவிலில் வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்
தி.மு.க. சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.