மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூர் தொகுதியை ம.தி.மு.க. கைப்பற்றியது + "||" + Vasudevanallur constituency Captured

வாசுதேவநல்லூர் தொகுதியை ம.தி.மு.க. கைப்பற்றியது

வாசுதேவநல்லூர் தொகுதியை ம.தி.மு.க. கைப்பற்றியது
வாசுதேவநல்லூர் தொகுதியை ம.தி.மு.க. கைப்பற்றியது.
தென்காசி, மே:
வாசுதேவநல்லூர் தொகுதியை ம.தி.மு.க. கைப்பற்றியது. அந்த கட்சி வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 68 ஆயிரத்து 730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 109 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 889 பேர் வாக்களித்தனர். 
வாசுதேவநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.மனோகரன், தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் தி.சதன் திருமலைக்குமார், அ.ம.மு.க. சார்பில் எஸ்.தங்கராஜ், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ச.ம.க. சார்பில் எம்.சின்னசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்கள் மாறி, மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 68 ஆயிரத்து 730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரனுக்கு 66 ஆயிரத்து 363 வாக்குகள் கிடைத்தன.

வாக்குகள் விவரம் 

வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. சி.சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.) - 68,730
2. ஏ.மனோகரன் (அ.தி.மு.க.) - 66,363
3. மதிவாணன் (நாம் தமிழர் கட்சி) - 16,731
4. எஸ்.தங்கராஜ் (அ.ம.மு.க.) - 13,376
5. வி.பேச்சியம்மாள் (புதிய தமிழகம்) - 3,651
6. எம்.சின்னசாமி (ச.ம.க.) - 2,139
7. எம்.ஈஸ்வரன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி) - 795
8. பி.ராமமூர்த்தி (சுயே.) - 716
9. பி.ஜெயக்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) - 544
10. கே.கருப்பசாமி (எனது இந்தியா கட்சி) - 342
11. ஜி.முத்துப்பாண்டி (சுயே.) - 323
12. நோட்டா - 2,171