மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் தொகுதி தி.மு.க. வசம்: 2-வது முறையாக தொடர்ந்து வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி + "||" + Tiruvallur constituency DMK Continued for the 2nd time VG Rajendran wins

திருவள்ளூர் தொகுதி தி.மு.க. வசம்: 2-வது முறையாக தொடர்ந்து வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி

திருவள்ளூர் தொகுதி தி.மு.க. வசம்: 2-வது முறையாக தொடர்ந்து வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி
வி.ஜி.ராஜேந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 1,07,709 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.ரமணா 85,008 வாக்குகளும் பெற்றனர். வி.ஜி.ராஜேந்திரன் பி.வி.ரமணாவை விட கூடுதலாக 22,701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வி.ஜி.ராஜேந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார். தற்போது 2-வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று உள்ளார். இந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி வாகை சூடிய பி.வி.ரமணா, 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்ட அவர், தற்போது தோல்வியடைந்துள்ளார்.