மாவட்ட செய்திகள்

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி சு.முத்துசாமி வெற்றி- கே.வி.ராமலிங்கம் 78,668 வாக்குகள் பெற்றார் + "||" + erode west constituency

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி சு.முத்துசாமி வெற்றி- கே.வி.ராமலிங்கம் 78,668 வாக்குகள் பெற்றார்

ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி சு.முத்துசாமி வெற்றி- கே.வி.ராமலிங்கம் 78,668 வாக்குகள் பெற்றார்
ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி சு.முத்துசாமி வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக வந்த கே.வி.ராமலிங்கம் 78 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்றார்.
ஈரோடு
ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி சு.முத்துசாமி வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக வந்த கே.வி.ராமலிங்கம் 78 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்றார்.
வெற்றி
ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் சு.முத்துசாமி போட்டியிட்டார். அவர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்தார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான 2 லட்சத்து 3 ஆயிரத்து 264 ஓட்டுகளில் 99 ஆயிரத்து 32 ஓட்டுகள் பெற்றார். மேலும் 2 ஆயிரத்து 806 தபால் ஓட்டுகளில் 1,725 வாக்குகள் பெற்றார்.      மொத்தம் 1 லட்சத்து 757 ஓட்டுகள் பெற்று ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சு.முத்துசாமி வெற்றி பெற்றார்.
இவர் வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் 468 தபால் ஓட்டுகள் உள்பட 78 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்றார். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். மொத்தம் 22 ஆயிரத்து 89 ஓட்டுகள் கூடுதலாக பெற்று சு.முத்துசாமி எம்.எல்.ஏ. ஆனார்.
டெபாசிட் இழப்பு
இவர்கள் 2 பேர் தவிர எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு மேற்கு தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
பி.சந்திரகுமார் (நாம் தமிழர்) - 13,353
துரைசேவுகன் (மக்கள் நீதி மய்யம்) - 8,107
எஸ்.சிவசுப்பிரமணியன் (அ.ம.மு.க.) - 730
ஏ.தனலட்சுமி (பகுஜன் சமாஜ் கட்சி) - 568
எம்.சந்திரன் (அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா) - 113
தங்கவேல் (யுனெடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி) - 109
கே.மாதன் (கணசங்கம் பார்ட்டில் ஆப் இந்தியா) - 108
கே.பாலசுப்பிரமணியம் (இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி) - 54
எம்.விமலா (சுயே) - 434
ஏ.முத்துசாமி (சுயே) - 189
ஏ.வெங்கடேசன் (சுயே) - 179
ஆர்.காளிதாஸ் (சுயே) - 169
ஆர்.அய்யாவு (சுயே) - 73
நோட்டா - 1954