மாவட்ட செய்திகள்

பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி + "||" + perundurai constituency

பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி

பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
ஈரோடு
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வெற்றி
பெருந்துறை தொகுதியில் புதுமுக வேட்பாளராக களம் இறங்கிய அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் பதிவான 1 லட்சத்து 90 ஆயிரத்து 406 வாக்குகளில் 85 ஆயிரத்து 125 ஓட்டுகள் பெற்றார். இதில் 593 ஓட்டுகள் தபால் ஓட்டுகளாகும். இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கே.கே.சி.பாலு போட்டியிட்டார். அவர் மொத்தம் 70 ஆயிரத்து 618 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். எனவே 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.ஜெயக்குமார் வெற்றி அடைந்தார்.
பெருந்துறை தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குளறுபடி, பாதுகாப்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்
பெருந்துறை தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
சி.லோகநாதன் (நாம் தமிழர் கட்சி) - 10,294
சி.கே.நந்தகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 3,533
எம்.தம்பி (பகுஜன் சமாஜ் கட்சி) - 1,620
பி.ஆர்.குழந்தைவேல் (தே.மு.தி.க.) - 858
கே.எஸ்.தட்சிணாமூர்த்தி (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 618
வேலுச்சாமி (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) - 107
பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 102
எம்.ரமேஷ் (நமது கொங்கு முன்னேற்ற கழகம்) - 90
தோப்பு என்.டி.வெங்கடாசலம் (சுயே) - 9,891
சங்கர்சாமி (சுயே) - 3,336
சம்பத்குமார் (சுயே) - 245
சதீஸ்குமார் (சுயே) - 799
பி.ஆர்.வெங்கடாசலம் (சுயே) - 221
எஸ்.ஆர்.தேவேந்திர மாணிக்கம் (சுயே) - 184
ஜே.கோபால கிருஷ்ணன் (சுயே) - 182
கார்த்தி (சுயே) - 169
எம்.பாலமுருகன் (சுயே) - 129
வி.எம்.பாலசுப்பிரமணி (சுயே) - 128
ஜோதி முருகன் (சுயே) - 106
மயில்சாமி (சுயே) - 86
கிருஷ்ணன் (சுயே) - 79
ஜீவா (சுயே) - 74
கே.வெங்கடாசலம் (சுயே) - 60
நோட்டா - 1189

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்துறை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு?- முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து இருப்பதாக முகவர்கள் திடீர் குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்
சுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்த பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து நீக்கம்
3. பெருந்துறை ெதாகுதியில் சீட் ஒதுக்க மறுத்ததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக மனு தாக்கல்- யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி
அ.தி.மு.க.வில் சீட் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தொகுதிக்கு யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி அளித்து உள்ளார்.