மாவட்ட செய்திகள்

கடும் போராட்டத்துக்கு பின் முடிவுக்கு வந்த பா.ஜ.க. வெற்றி- மொடக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு + "||" + modakuruchi constituency

கடும் போராட்டத்துக்கு பின் முடிவுக்கு வந்த பா.ஜ.க. வெற்றி- மொடக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு

கடும் போராட்டத்துக்கு பின் முடிவுக்கு வந்த பா.ஜ.க. வெற்றி- மொடக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு
மொடக்குறிச்சி தொகுதியில் கடும் போராட்டத்துக்கு பின் பா.ஜ.க. வெற்றி முடிவுக்கு வந்தது.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி தொகுதியில் கடும் போராட்டத்துக்கு பின் பா.ஜ.க. வெற்றி முடிவுக்கு வந்தது.
முன்னிலை
மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசன், பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் போட்டியிட்டனர். தொடக்கத்தில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீர் என பா.ஜனதா முன்னிலை பெற்றது. இது கடைசிவரை தொடர்ந்தது. இந்த நிலையில் இறுதி கட்டத்தில் 2 வேட்பாளர்களும் ஓரளவு சம நிலையில் இருந்தனர். எனவே முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. 2 வேட்பாளர்களின் முகவர்களும் அடுத்தடுத்து புகார்கள் தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
வெற்றி அறிவிப்பு
இறுதியில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தி தபால் ஓட்டுகளை மறுபடி எண்ண உத்தரவிட்டார். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணைய விதிமுறைகளை பயன்படுத்தி தபால் ஓட்டுகளை எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டார். இரவு 11 மணியை தாண்டிய பிறகும் எண்ணிக்கை நடந்தது.
இறுதியில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சரஸ்வதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர், கடும் போராட்டத்துக்கு பின்னர் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி; ஈரோடு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ. ஆனார் டாக்டர் சரஸ்வதி
மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று, ஈரோடு மாவட்டத்தின் பெண் எம்.எல்.ஏ.வாக டாக்டர் சரஸ்வதி ஆனார்.