மாவட்ட செய்திகள்

தி.மு.க. அமோக வெற்றி: மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திப்பு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் + "||" + DMK wins With MK Stalin IAS, IPS Meeting with officials

தி.மு.க. அமோக வெற்றி: மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திப்பு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

தி.மு.க. அமோக வெற்றி: மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திப்பு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை, 

சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. 10 ஆணடுகளுக்கு பிறகு தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதாக தகவல் வெளியானதில் இருந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை நோக்கி அதிகாரிகள் படையெடுக்க தொடங்கினார்கள்.

மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரிகள் வாழ்த்து

அதன்படி, தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், ஆவண காப்பக ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் கோபால், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து கூறினர்.

அதேபோல், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, டி.ஜி.பி. கந்தசாமி, சிறப்பு டி.ஜி.பி.க்கள் ஷகில் அக்தர், சங்கர் ஜூஜூவால், சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி. ரவி, ஏ.டி.ஜி.பி.க்கள் மஞ்சுநாதா, சந்தீப்ராய் ரத்தூர், போக்குவரத்து துறை ஐ.ஜி. பிரமோத்குமார், எஸ்.பி. வருண்குமார், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் உள்பட ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அவரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.