மாவட்ட செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி பெற்றார் + "||" + DMK in Madurai North constituency Candidate Commander wins

தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி பெற்றார்

தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி பெற்றார்
மதுரை வடக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தளபதி வெற்றி
மதுரை, மே.3-
மதுரை வடக்கு தொகுதியில் தி.மு.க. சார்பாக அந்த கட்சியின் மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி போட்டியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியான பா.ஜனதா சார்பில் டாக்டர் சரவணன், அழகர்(மக்கள் நீதி மய்யம்), அன்பரசி (நாம் தமிழர் கட்சி). ஜெயபால் (அ.ம.மு.க.) உள்பட 15 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 25 சுற்றுகளாக அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவரது வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் அதிகரித்து கொண்டே சென்றது. 20-வது சுற்று முடிவில் தளபதி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். டாக்டர் சரவணன் 41 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றார்.
24 சுற்றுகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் 73,010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. வேட்பாளர் ்டாக்டர் சரவணன் 50,094 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தி.மு.க.வேட்பாளர் தளபதி 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி
கந்தர்வகோட்டை (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை வெற்றி பெற்றார்.
2. 3வது ஒரு நாள் போட்டி: 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
3. 2வது ஒரு நாள் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
4. குஜராத் உள்ளாட்சி தேர்தல்: 6,110 இடங்களில் பா.ஜ.க. வெற்றி; பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா நன்றி
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8,474 இடங்களில் 6,110 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் ஜே.பி. நட்டா மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
5. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.